
Diabetes Prevention
5-10 ஆண்டுகளுக்கு முன்பே கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைந்து கொண்டே வந்து¸ இறுதியில் சர்க்கரை நோயாக மாறுகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பு ஒருவருக்கு எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறிய உதவும் பரிசோதனை தான் GTT (குளுக்கோஸ் தாங்குதிறன் பரிசோதனை) என்கிறோம்
Diabetic prevention

Prevention of Complications
சர்க்கரை நோயினால் வரக்கூடிய கொடிய பின்விளைவுகளை தடுத்து நலவாழ்வு வாழசெய்தல
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுபடுத்த முடியும். சர்க்கரை நோயை வெல்வது என்றால், கட்டுபடாத சர்க்கரை நோயினால் வரக்கூடிய கொடிய பின்விளைவுகளை தடுத்து, நல்ல வாழ்க்கையை வாழ்வதே ஆகும்.
✔ சிறந்த உணவு முறை
✔ மன அமைதி – மன வள பயிற்சிகள்
✔ முறையான உடற்பயிற்சிகள்
✔ மாத்திரைகள் & இன்சுலின் (தேவைப்பட்டால்)
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன்மூலம் சர்க்கரை நோயுடன் நலவாழ்வு வாழ முடியும். மேலும் சர்க்கரை நோயினால் உச்சி முதல் பாதம் முடிய அனைத்து உறுப்புகளும் பாதிப்படையலாம். குறிப்பாக,
✔ கால் பாதிப்ப
✔ கண் பாதிப்பு
✔ இருதய பாதிப்பு
✔ கிட்னி பாதிப்பு
✔ பக்கவாதம்
போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மன அமைதி முக்கியத்துவம் அறிந்து வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தால் நலவாழ்வு வாழ முடியும்.
Prevention of Complications

Inpatient Facilities
Operation Theatre - அறுவை சிகிச்சைப் பிரிவு
Management of Diabetes & Pregnancy (Gestational Diabetes Mellitus)
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் சர்க்கரைநோய் தோன்றி குழந்தை பிறந்த உடன் சர்க்கரைநோய் மறைந்து போவதையே கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes) என்கிறோம். இந்த தாய்மார்களுக்கு எதிர்காலத்தில் சர்க்கரைநோய் வரும் வாய்ப்புள்ளது. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் உடல்பருமன்¸ சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது.
ஆகவே கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோயை உடனடியாக கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதால் மட்டுமே¸ அந்த தாய்க்கும் சேய்க்கும் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும். அதற்கு கர்ப்பகால சர்க்கரை நோய் (GDM) கண்டறியும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ... அவசியம் ... அவசியம் ...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்¸ அவருக்கும் அவர்தம் குழந்தைக்கும் சர்க்கரை நோயைத் தடுத்து நலவாழ்வு வாழவும் ‘கர்ப்பகால சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு/விழிப்புணர்வு முகாம்கள்’ எங்களது விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் & திண்டுக்கல் சர்க்கரை நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் நடத்தி வருகிறோம்.
ஆகவே இதைப் பற்றிய விழிப்புணர்வை முடிந்தவரை சமுதாயத்தில் ஏற்படுத்துவது அவசியம்.
In Patient Facilities

Obesity Management
உடற்பருமனைக் குறைக்க பிரத்யேக சிகிச்சைப் பிரிவு
இன்றைய தினம் இந்தியாவில் 6 முதல் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என ஆய்வு கூறுகிறது. மேலும்¸ இந்தியாவில் 20% இளைஞர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் அதிக உடல் எடையும்¸ உடற்பருமனும் உள்ளவர்கள்¸ இவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்¸ மாரடைப்பு¸ பக்கவாதம்¸ கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
போதிய உடற்பயிற்சி இல்லாமை மற்றும் அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுதல்
மேற்கண்ட காரணிகள் மூலம் உடற்பருமன் உண்டாகிறது.
ஆரோக்கியமான உணவு முறைகளும்¸ முறையான¸ சரியான உடற்பயிற்சிகளும் செய்வதன் மூலம் உடற்பருமனைக் குறைக்க முடியும்.
Pharmacy - மருந்தகம்
Physiotherapy - By the Qualified Physiotherapist
Diabetic Shoppe:
சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக காலணிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள்
Obesity Management

Nephropathy and Retinopathy Screening
Retinopathy - கண்பாதிப்பு:
இரத்தநாளங்கள்¸ நரம்புகள்¸ விழித்திரை¸ லென்சு¸ பாப்பா¸ இவையாவும் கண்ணின் உறுப்புகள் ஆகும். இரத்த நாளங்கள் அடைப்பட்டு போவதாலும்¸ இரத்தம் கசிவதாலும் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை குறைகிறது. சிலருக்கு நரம்புகளும்¸ விழித்திரையும் திடீரென்று செயலிழந்து கண்ணை குருடாக்கலாம். இது சர்க்கரை இருப்பதே தெரியாத நோயாளிகளுக்குக் கூட ஏற்படலாம். இது ஓர் அளவுக்குதான் குணப்படுத்தக் கூடிய நோய் என்பதால் வருமுன் காப்பது அறிவுடைமையாகும்.
Nephropathy - கிட்னி பாதிப்பு:
சர்க்கரை நோயாளிகளுக்கு கிட்னி பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இரத்தச் சர்க்கரை அளவுகளின் ஏற்றத்தாழ்வுகள் கிட்னியின் செயல் திறனை பாதிக்கும். கிட்னி பலகீனமடையும்.
அதனால் சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் Stage II, Stage III கிட்னி பாதிப்புகள் வராமலும் டயாலிஸிஸ் செய்யும் நிலையை அடையாமலும் பாதுகாக்க முடியும்.

Computerised Bio Chemical Lab
Qualified Lab Technician மூலம் துல்லியமான பரிசோதனை முடிவுகளை நமது ஆய்வுக் கூடத்தில் அளித்து வருகிறோம்.

Dietician/Diabetic Educator Service - சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்து¸ அவர்களை விழிப்புணர்வுடன் வாழ செய்வதே எங்களின் நோக்கமாகும்.